மீண்டும் 58 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது.;
சென்னை,
தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது. கடந்த மாதம் (டிசம்பர்) 26, 27-ம் தேதிகளில் விலை அதிகரித்து, பின்னர் விலை குறைந்த தங்கம், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில் மறுநாள் ரூ.360 குறைந்தது.
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்து ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.58,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.