கால் அழுத்த சொன்ன விவகாரத்தில் ஆசிரியர் சஸ்பெண்ட்: மாணவர்கள் எதிர்ப்பு

ஆசிரியர் ஜெயபிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.;

Update: 2024-11-23 16:17 GMT

சேலம்,

சேலம் கிழக்கு ராஜபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை தனக்கு கால் அழுத்திவிட சொல்லிவிட்டு ஓய்வெடுத்த கணக்கு ஆசிரியர் ஜெயபிரகாஷின் வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

இந்த நிலையில், ஆசிரியர் ஜெயபிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், ராஜாபாளையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்தை அடுத்து போலீசார் மாணவர்களை குண்டுக்கட்டாக அகற்ற முயன்ற நிலையில் அதையும் மீறி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

ஆசிரியர் ஜெயபிரகாஷ் கீழே விழுந்துவிட்டதால், அவரது கால் பகுதியில் வீக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆசிரியருக்கு முதலுதவி செய்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்