மும்பையில் புறநகர் ரெயில் தடம்புரண்டு விபத்து

மும்பையில் புறநகர் ரெயிலின் கடைசி பெட்டி தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.

Update: 2024-10-19 02:22 GMT

Image Courtesy : PTI

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள கல்யாண் ரெயில் நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தில், நேற்று இரவு 9 மணியளவில் டிட்வாலா-சி.எஸ்.எம்.டி. புறநகர் ரெயில் நுழைந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ரெயிலின் கடைசி பெட்டி தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.

ரெயில் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தடம்புரண்ட ரெயில் பெட்டியை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 


Tags:    

மேலும் செய்திகள்