மாணவர்களும், இளைஞர்களும் வாழ்வில் முன்னோக்கி நடைபோட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மாணவர்களும், இளைஞர்களும் வாழ்வில் முன்னோக்கி நடைபோட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-04 14:08 GMT

சென்னை,

சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'முதல்வர் படைப்பகத்தை' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். படிப்பு தளம், பணியாற்றும் தளம் மற்றும் உணவுத்தளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை இந்த படிப்பகம் உள்ளடக்கியுள்ளது. ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

"முதல்வர் படைப்பகம்"... பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், வீட்டில் இருந்து பணிபுரிவதுபோல், அலுவலகங்களுக்கு வெளியே இருந்து பணிபுரியும் இளைஞர்களது வேலைக்கு ஏற்றாற்போல், வைபை (WiFi) உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பகிர்ந்த பணியிட மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்கள் கவனச் சிதறல்களின்றிப் பயில ஏதுவாகப் படிப்பகம் ஆகியவற்றைக் கொளத்தூர் தொகுதியில் உருவாக்கியுள்ளோம்.

இதுபோன்ற மையங்களைச் சென்னையின் பிற தொகுதிகளிலும் உருவாக்கிட வேண்டும் என அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் அறிவுறுத்தியுள்ளேன். இத்தகைய வாய்ப்புகளைச் சீரிய முறையில் இளைஞர்களும் மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; வாழ்வில் முன்னோக்கி நடைபோட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்