கோவையில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.42 கோடி சிக்கியது?

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Update: 2024-10-29 04:03 GMT

கோவை,

கோவையில் கடந்த 5 நாட்களாக தொழில் அதிபர்கள் வீடுகள், நிறுவனங்கள், உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள் என 11 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ், ஹார்டு டிஸ்குகள் ஆகியவை சிக்கியதாக தெரிகிறது.

வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் ரூ.42 கோடி கைப்பற்றப்பட்டதாகவும், கணக்கில் வராத வருமானம் பலகோடிக்கு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை.

அத்துடன் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் கணக்கில் வராத வருமானம் தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்