'ராகுல் காந்தி தலைவராக தகுதி இல்லாதவர்' - வானதி சீனிவாசன்
ராகுல் காந்தி தலைவராக தகுதி இல்லாதவர் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.;

கோவை,
டெல்லி சட்டசபை தேர்தல் மூலம் ராகுல் காந்தி தலைவராக தகுதியில்லாதவர் என மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"ராகுல் காந்தியின் தலைமை எப்படிப்பட்டது என்பது பல்வேறு தேர்தல்களில் நிரூபிக்கப்பட்ட விஷயம். அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தகுதி இல்லாதவர். டெல்லி தேர்தலில் அது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு தேசிய கட்சி. ஆனால் தேசியத்திற்கும், ராகுல் காந்திக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா?
முற்றிலும் தேச விரோத கருத்துகளை பேசக்கூடிய தலைவராக காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி இருக்கிறார். தன்னுடைய கட்சியின் சித்தாந்தமே தெரியாத ஒரு தலைவர், ஒரு தேசிய கட்சியில் இருப்பது துரதிருஷ்டவசமானது. அதனால்தான் காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை."
இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.