பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
கடந்த 4 நாட்களில் சென்னையில் இருந்து ரயில், பேருந்து, ஆம்னி பேருந்து, சொந்த வாகனங்களில் 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.;
சென்னை,
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது. பொங்கலுக்காக 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டன.கடந்த 11-ம் தேதி முதலே பலரும் சொந்த ஊருக்கு பயணிக்க தொடங்கினர்.
அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து பஸ்கள் இயங்கின. இந்த நிலையங்களை இணைக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட மாநகர பஸ்களும் இயக்கப்பட்டன.கடந்த 4 நாட்களில் சென்னையில் இருந்து ரயில், பேருந்து, ஆம்னி பேருந்து, சொந்த வாகனங்களில் 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.