இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா இணையதளம் செயல்படாது - தமிழக அரசு அறிவிப்பு

இன்று முதல் 4 நாட்களுக்கு இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் இணையதளம் செயல்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2024-12-27 23:24 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழக அரசின் நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவையான "தமிழ்நிலம்" மென்பொருளில், விவசாயிகள் விவரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே 28-ந்தேதி (இன்று) காலை 10 மணி முதல் 31-ந்தேதி மாலை 4 மணி வரை 4 நாட்கள் இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் "தமிழ்நிலம்" https://tamilnilam.tn.gov.in/Revenue/ மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html பட்டா இணையவழி சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்