நெல்லை: கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது
நெல்லையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது செய்யப்பட்டார்.;

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி, சின்ன மூலக்கரை தெற்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் உதயகுமார் (வயது 32), சட்டவிரோதமாக விற்பனை செய்ய கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து நாங்குநேரி குற்றப்பிரிவு (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி அந்த வாலிபர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், அந்த வாலிபர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.