என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் கமிஷனர் கூறிய திடுக்கிடும் தகவல்கள்

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரும் இரானி கொள்ளையர்கள் என மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்;

Update:2025-03-26 12:10 IST
என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் கமிஷனர் கூறிய திடுக்கிடும் தகவல்கள்

சென்னை,

சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குலாம் என்ற  நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அருண் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது,

சென்னையில் செயின்  பறிப்பில் ஈடுபட்ட 3 பேரும் இரானி கொள்ளையர்கள். கொள்ளையர்கள் பறித்துச் சென்ற செயின்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. பிடிபட்ட கொள்ளையர்கள் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் நபர்களுக்குத் தொடர்பு இல்லை. குற்றம் நடந்த 3 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது. சிசிடிவி காட்சிகளை வைத்தே குற்றவாளிகளைப் பிடித்தோம்.விமானத்தை நிறுத்தி வைத்து, அதிலிருந்து குற்றவாளிகளைக் கைது செய்தோம். உடைகளை மாற்றியுள்ளனர், ஆனால் ஷுக்களை மாற்றவில்லை, அதை வைத்து கண்டு பிடித்தோம் தேடப்படும் குற்றவாளிகளில் டாப் 3ல் குற்றவாளி ஜாபர் இருந்தார்.

மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய கைதானவர்களை அழைத்துச் சென்றபோது என்கவுன்ட்டர் நடந்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட  குலாம் 2 ரவுன்ட் சுட்டது, போலீஸ் வாகனத்தில் பட்டது. தற்காப்புக்காக போலீஸ் ஒரு முறை சுட்டனர். தற்காப்பு நடவடிக்கையாக என்கவுன்டர் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்