மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 95.88 அடியாக இருந்தது.

Update: 2024-10-19 23:00 GMT

மேட்டூர்,

தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இந்த மழை கால்வாய் பாசன பகுதிகளிலும் பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு கடந்த 15-ந் தேதி வினாடிக்கு 300 கனஅடியாக குறைக்கப்பட்டது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் கால்வாய் பாசன பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேவை அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 95.88 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 384 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடியும் என வினாடிக்கு 1,100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்