செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Update: 2024-10-15 11:58 GMT

சென்னை,

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்வதால் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. காலையில் 260 கன அடியாக இருந்த செம்பரபாக்கம் ஏரியின் நீர்வர்த்து 1,080 கன அடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி கொண்ட ஏரியில் தற்போது நீர் இருப்பு 1,249 மில்லியன் கன அடியாக உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 13.38 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்