புத்தாண்டு வாழ்த்து: அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம் - போலீசார் எச்சரிக்கை

அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் ஆப் லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2024-12-31 16:44 GMT

கோப்புப்படம்

நெல்லை,

அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லும் செயலிக்கான ஆப் லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், இணையதளத்தில் தற்போது செயல்பட்டு வரும் புத்தாண்டு வாழ்த்து செயலி (apk file) மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

மோசடி நடைபெறும் விதம் எப்படி என்றால், உங்களது வாட்ஸ்-அப் எண்ணுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு apk file அல்லது link செய்தி வரும் அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

நீங்கள் அந்த apk file-ஐ ஓபன் செய்துவிட்டால் உங்களது போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்படும். மேலும் உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை தெரிந்துகொண்டு பண மோசடி செய்து விடுவார்கள்.

எனவே வாட்ஸ்-அப்பில் வரும் இதுபோன்று அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகளை தவிர்க்க வேண்டும். அந்த எண்ணிற்க்கு மொபைல் போன் மூலமாக அழைத்து விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை, எதிர்பாராதவிதமாக நீங்கள் பாதிக்கப்பட்டால், சைபர் கிரைம் இணையதளமான cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் அளிக்கவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்