சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை

சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது என பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர் .

Update: 2024-10-31 07:03 GMT

சென்னை,

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.மக்கள் காலை முதலே பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது என பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர் .

சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன . கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகளவில் பட்டாசுகள் விற்பனையாகியுள்ளது. தற்போது வரை 90சதவீத  பட்டாசுகள் முற்றிலுமாக விற்பனையாகிவிட்டன என பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர் .

Tags:    

மேலும் செய்திகள்