டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.;
மதுரை ,
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசயிகள் சங்கம் சார்பில் மதுரை தலைமை தபால் நிலையத்தை நோக்கி நடை பயண பேரணி நடைபெற்று வருகிறது. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள், வணிகர்கள் இணைந்து மேலூர் அருகே நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளனர். நரசிங்கம்பட்டியில் இருந்து நடைபயணத்தை தொடங்கி தல்லாகுளத்தில் நிறைவு செய்கின்றனர் அனுமதியின்றி பேரணி நடைபெறுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூரில் , மருந்தகம், உணவகம் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.