எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை வருகை

அ.தி.மு.க. 53-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.;

Update: 2024-10-20 02:02 GMT

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் அவர், பாளையங்கோட்டையில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் அங்கிருந்து அம்பைக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். மாலை 5 மணி அளவில் அம்பை-ஆலங்குளம் ரோட்டில் வடக்கு ரதவீதியில் அ.தி.மு.க. 53-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

பின்னர் அவர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து ரெயில் மூலம் சேலம் புறப்பட்டு செல்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்