வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் தி.மு.க. அரசு படுதோல்வி- ராமதாஸ் குற்றச்சாட்டு
வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்து விட்டது. என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
சென்னை ,
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:,
.சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்து விட்டது. வெள்ளதடுப்பு பணிகளை முடிக்காததால் மழையினால் மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும்.விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் 195 டாஸ்மாக் கடைகள் உள்ளது. விழுப்புரத்தில் 109, கள்ளகுறிச்சியில் 86 கடைகள் உள்ளது. தற்போது கொந்தமூர், நல்லாவூர், வெள்ளிமலை ஆகிய இடங்களில் 3 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது கண்டிக்கதக்கது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறும் அரசு புதிய கடைகளை திறக்க உள்ளதை ஏற்க முடியாது. இது அரசின் தோல்வியை காட்டுகிறது.
மத்திய அரசு பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசும் 3 விழுக்காடு அகவிலைப்படி வழங்கி, பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.