தாய், தந்தை பிரிந்து வாழ்வதால் மன அழுத்தம்... விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தாய், தந்தை பிரிந்து வாழ்வதால் மனம் உடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2024-11-25 17:07 GMT

திருச்சி,

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம், கொளக்குடியை சேர்ந்தவர் ராமராஜ். இவரது மகன் பிரசாந்த் என்ற செந்தில்குமார். இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவரது தாய், தந்தை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரசாந்த் தனது தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசாந்த் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு, தனது தாத்தாவிடம் அது பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரசாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்