கடலூர்: மழை பாதிப்புகளை பார்வையிட்ட துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார்;
சென்னை,
பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. கனமழை, வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார் . மேலும் தண்ணீர் அதிகம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மோட்டார்கள் மூலம் வெள்ள நீரை வெளியேற்றும் பணியை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தினார்.