சென்னை புறநகர் ரெயில்கள் நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்
புத்தாண்டை முன்னிட்டு, புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 700 ரெயில்களுக்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரெயில் சேவையை மாற்றம் செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை (புதன்கிழமை), சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பிரிவுகளில் புறநகர் ரெயில் சேவைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.