சென்னை: உயர் ரக கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது
பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.;
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த சகோதரர்கள் உட்பட 3 பேரை கைது செய்து ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் உயர் ரக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாங்காக்கில் இருந்து டெல்லி வந்து விமானம் மூலம் சென்னைக்கு பலகார பொருட்களோடு பொட்டலமாக கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்துள்ளனர். கடத்தி வரப்பட்ட உயர்ரக கஞ்சாவின் மதிப்பு 100 கிராம் ரூ.1 லட்சம் என தகவல் வெளியாகி உள்ளது.