உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பர், சில்வர் கவர்களுக்கு தடை
தடையை மீறினால் உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஓட்டல்கள் மற்றும் டீ கடைகளில் பார்சலுக்கு பிளாஸ்டிக் கவர், சில்வர் பேப்பர்களை பயன்படுத்த உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.
பிளாஸ்டிக் பேப்பர், கவர்கள், சில்வர் பாயில் கவர் போன்றவற்றில் உணவுகளை கட்டிக் கொடுத்தால், முதல் முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், தடையை மீறினால் உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.