முத்துராமலிங்க தேவருக்கு அரங்கம்: முதல்-அமைச்சருக்கு கருணாஸ் நன்றி

முத்துராமலிங்க தேவர் நினைவிடம் அருகில் தமிழ்நாடு அரசால் அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-28 21:19 GMT

சென்னை,

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முத்துராமலிங்க தேவர் நினைவை போற்றும் வண்ணம், அக்டோபர் 30-ந் தேதி தேவர் ஜெயந்தி விழாவை தமிழ்நாடு அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜெயந்தி விழா நடைபெறும் சூழலில் அவரது நினைவிடம் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வந்தது. அது தற்போது தமிழ்நாடு அரசால் நிரந்தர அரங்கமாக மாறி இருப்பது பாராட்டுக்குரியது. ரூ.1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் செலவில் மக்கள் நலன் கருதி முத்துராமலிங்க தேவர் அரங்கம் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நேற்று) காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். எனவே முதல்-அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்