சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்; போலீசார் தகவல்

புயல் கரையை கடந்தநிலையில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது.

Update: 2024-12-01 05:56 GMT

சென்னை,

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சென்னையில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* ரங்கராஜபுரம், கெங்குரெட்டி, மேட்லி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கி உள்ளதால், அழகப்பா சாலை, லூப் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

* பர்னாபி சாலை, நாகேஸ்வரா பூங்கா, அண்ணா மேம்பாலம் சர்வீஸ் சாலை, ஸ்ரீ மான் ஸ்ரீநிவாசா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

* திருமலைபிள்ளை சாலையில் மரம் விழுந்ததால், போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.

* அழகப்பா சாலை மூடப்பட்டுள்ளது. அவ்வழியாக வரும் வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக திரும்பி நாயர் பாயிண்ட் சென்று ஈ.வி.ஆர்., சாலையை அடையலாம்.

* லூப் சாலை (மூடப்பட்டது). அவ்வழியாக வரும் வாகனங்கள் சாந்தோம் ஹை ரோடு வழியாக செல்ல வேண்டும்.

இவ்வாறு சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை மழை பெய்யவில்லை. சென்னையில் ஒரு சில இடங்களை தவிர பிற பகுதிகள் இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது.

இதனிடையே புயல் எச்சரிக்கை வந்ததுமே, சென்னை மக்கள் அடித்துப் பிடித்து தங்கள் கார்களை மேம்பாலங்களில் நிறுத்தத் தொடங்கினர். நேற்று மாலையுடன் சென்னையில் மழை நின்ற நிலையில், இன்னும் பெரும்பாலானோர் தங்கள் கார்களை எடுக்கவில்லை. வேளச்சேரி மேம்பாலத்தில் 500க்கும் மேற்பட்ட கார்கள் தற்போதும் வரிசைகட்டி நிற்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்