2024-ல் தமிழக கோர்ட்டுகளில் 17.72 லட்சம் வழக்குகள் முடித்து வைப்பு

2024-ம் ஆண்டில் தமிழக கோர்ட்டுகளில் 17.72 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.;

Update: 2025-01-01 09:20 GMT

சென்னை,

தமிழகத்தில் சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2023-ம் ஆண்டை விட, 2024-ம் ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது 15 லட்சத்து 16 ஆயிரத்து 874 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேசிய நீதித்துறை தகவல் தொகுப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், தமிழக கோர்ட்டுகளில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2023-ல் 1 லட்சத்து 56 ஆயிரமாக இருந்த நிலையில், 2024-ல் 17 லட்சத்து 72 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் 2024-ல் மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 416 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. மதுரை ஐகோர்ட்டு கிளையில் 2024-ல் 84 ஆயிரத்து 53 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. வழக்குகள் தேக்கம் ஒரு புறம் இருந்தாலும், முடித்து வைக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்