வேளாங்கண்ணி பேராலய திருவிழா: நாகை, கீழ்வேளூர் வட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை
நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
நாகப்பட்டினம்,
நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை தேவாலயங்களில், வேளாங்கண்ணி தேவாலயமும் ஒன்றாக உள்ளது. வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றம் தொடங்கும். செப்டம்பர் 8- ம் தேதி வரை இந்த திருவிழா கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் 29-ந்தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.