திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் போகமாட்டார்: சபாநாயகர் அப்பாவு

திருமாவளவன் கருத்து குறித்து முதல்-அமைச்சர் தெளிவான விளக்கத்தை கூறிவிட்டார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Update: 2024-09-15 10:20 GMT

குமரி,

கன்னியாகுமரியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் மூலம் சுமார் 7,500 கோடிக்கு மேல் முதலீடுகள் வந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள். இந்தப் பயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இது வருங்கால இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

நான் ஒரு கிறிஸ்தவர் என்பதால்தான் எனக்கு சபாநாயகர் பதவியை முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார் என்று நான் கூறியதாக பாஜகவினர் குறைகூறுகின்றனர். தமிழக கவர்னர் இது ஒரு மதசார்புள்ள நாடுதான் எனக் கூறுகிறார். முதலில் அவர்கள் இதற்கு பதில் கூறட்டும் பிறகு நான் பதில் கூறுகிறேன்.

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் பேசுவதை பொறுத்தவரையில் அவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும். திருமாவளவன் கருத்து குறித்து முதல்-அமைச்சர் தெளிவான விளக்கத்தை கூறிவிட்டார். திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் போவார் என்பது நடக்காது. மதுவிலக்கு கொள்கையை பற்றி 2016 தேர்தல் அறிக்கைகளில் நாங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்