தண்டவாளத்தின் நடுவே கிடந்த பாறாங்கல்; பொதிகை ரெயிலை கவிழ்க்க சதியா? போலீஸ் விசாரணை

தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.;

Update: 2024-09-27 02:44 GMT

தென்காசி,

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புதன்கிழமை இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. சங்கனாப்பேரி பகுதி அருகே ரெயில் சென்றபோது தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரெயில் ஓட்டுனர் சாமர்த்தியமாக ரெயிலை ஓட்டி சென்றதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக இன்ஜின் ஓட்டுனர் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தண்டவாளங்களை ஆய்வு செய்தனர். செங்கோட்டை-சென்னை பொதிகை ரெயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதியா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Full View


Tags:    

மேலும் செய்திகள்