செய்திகள் சில வரிகளில்...

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-05-29 07:07 GMT

சென்னை,

* கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் உள்ள மண்டபத்தில் பிரதமர் மோடி 45 மணி நேரம் தியானம் செய்ய இருப்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக போலீசார் மட்டுமின்றி கடலோர காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

* மேற்கு வங்காள அரசு போலியான சான்றிதழ்கள் வழங்கியதன் காரணமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் முஸ்லிம்களுக்கு தவறாக வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* கேரளாவில் இன்று பரவலாக மழை பெய்தது. கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

* இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்கப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித்தார். இன்று பஞ்சாபில் பிரசாரம் மேற்கொண்ட அவர், அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.

* சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அரசியல் தொடர்பான கேள்விகள் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு அதுதொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்தார். இமயமலை செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

* சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வைகோ நலமுடன் இருப்பதாக வீடியோ பதிவிட்டுள்ளார்.

* டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்க கோரும் மனுவை அவசர வழக்காக பட்டியலிட சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. அவரது இடைக்கால ஜாமீன் காலம் 1-ந் தேதி வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.

* பாலியல் புகாரில் சிக்கிய தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா வெள்ளிக்கிழமை இந்தியா திரும்புகிறார். ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்ப அவர் விமான டிக்கெட் பதிவு செய்துள்ளார்.

* மராட்டிய மாநிலம் சாங்கிலி அருகே கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றது.

* உத்தரபிரதேசத்தில் இறுதிக்கட்ட தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இந்தியா- நேபாளம் இடையே 2 எல்லைசாவடிகளை சீல் வைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளது. ஒரு எல்லைசாவடி முழுமையாக சீல் வைக்கப்பட்டது. மற்றொன்றில் மிக முக்கிய அத்தியாவசிய பணிக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

*மத்தியபிரதேசத்தில் ஒருவர் தனது குடும்பத்தை சேர்ந்த 8 பேரை கோடரியால் வெட்டிக்கொன்றார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார். கூட்டுகுடும்பமாக அவர்கள் வசித்து வந்தனர்.

* ரீமெல் புயல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும்சேதம் ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவு உள்ளிட்டவை காரணமாக இதுவரை 37 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

* காசா முனையில் உள்ள ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்