கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி; விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக தியானம்
கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக 3 நாட்கள் தியானம் செய்கிறார்.;
சென்னை,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 6 கட்ட தேர்தல் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் 57 தொகுதிகளுக்கு இறுதிகட்ட தேர்தல் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி 30ம் தேதி கன்னியாகுமரி வர உள்ளார். இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் 30ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் அன்று மாலை பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ளார்.
30ம் தேதி மாலை விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். அவர் இரவு பகலாக தியானம் செய்ய உள்ளார். 30ம் தேதி மாலை தியானத்தை தொடங்கும் பிரதமர் மோடி ஜூன் 1ம் தேதி மாலை நிறைவு செய்கிறார். 3 நாட்கள் அவர் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார். பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ள நிலையில் விவேகானந்தர் பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.