வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டில் முன்கூட்டியே தொடங்குகிறது.
சென்னை ,
ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . கடந்த ஆண்டு அக்டோபர் 21 ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் இந்த ஆண்டில் முன்கூட்டியே தொடங்குகிறது.
வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் தீபகற்ப பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யக்கூடும் என ஏற்கனேவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.