முதல்-அமைச்சரின் இணைச் செயலாளராக லட்சுமிபதி நியமனம்
முதல்-அமைச்சரின் இணைச் செயலாளராக லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
சென்னை,
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சரின் இணைச் செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லெட்சுமிபதி ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.