மத்திய அரசுக்கு நன்றி, கண்டனம் - திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

Update: 2024-08-16 05:34 GMT

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள 'தென் திசையின் தீர்ப்பு' என்ற நூல், வெளியிடப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் திமுக கூட்டணி பெற்ற வெற்றி குறித்து புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது

அத்துடன், இந்த கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதாவது, கலைஞர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடவுள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும், தமிழகத்துக்கான நிதி பகிர்வில் வஞ்சனை காட்டும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

3-வது தீர்மானமாக, உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கலைஞரின் வழியில் மாநில உரிமைகளை காத்திடுவோம் என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.  

 

Tags:    

மேலும் செய்திகள்