பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இயக்குநர் மோகன் ஜி கைது
திருச்சி தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்து அவரை திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.;
திருச்சி,
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய இயக்குனர் மோகன் ஜி, பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார். இயக்குநர் மோகன் ஜியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக பழனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை ராயபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்து அவரை திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.