சென்னை: குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை - அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் பெண் குழந்தை குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2024-09-06 09:53 IST

சென்னை,

சென்னை நந்தனம் சிஐடி நகர் 4வது பிரதான சாலையில் உள்ள குப்பைத்தொட்டியில் நேற்று இரவு 9 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த மெக்கானிக் கடை உரிமையாளர் குப்பைத்தொட்டி அருகே சென்று பார்த்துள்ளார்.

அப்போது குப்பைத்தொட்டியில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பச்சிளம் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், குழந்தையை காப்பகத்தில் சேர்ந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில் வயதான பெண்ணுடன் ஒரு இளம்பெண் வந்து கைக்குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு சென்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதன் அடிப்படையில் பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிச்சென்ற இளம்பெண் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்