காவிரி விவகாரம்: கர்நாடக அரசின் முடிவை ஏற்க முடியாது...முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Update: 2024-07-16 07:46 GMT

சென்னை,

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் அனைத்து தமிழக சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி. மு.க. சார்பில் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் செல்வப்பருத்தகை,பா.ஜ.க. சார்பில் கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் இந்த கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க, ஸ்டாலின்,

கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விடாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு நீரை திறந்து விடாத கர்நாடக அரசின் முடிவை ஏற்க முடியாது.பருவமழை சாதகமாக இருக்கும் நிலையிலும் கர்நாடக அரசின் செயலை ஏற்க முடியாது. என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்