மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-10-28 22:34 IST

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் நேற்று  இரவு அரியாங்குப்பம் மாதா கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் வில்லியனூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த ரகு (வயது 36) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரகுவை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்