பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

இளங்கோ நகர் அருகே பெண்ணின் செல்போனை பறித்துச் சென்ற வாலிபரை கைது செய்து, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-28 18:43 GMT

புதுச்சேரி

புதுவை உருளையன்பேட்டை எல்லையம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஹேமாவதி (வயது37). டெய்லர். இவர் இளங்கோ நகர் வழியாக வீட்டிற்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் ஸ்கூட்டரில் வந்த வாலிபர் ஒருவர் ஹேமாவதியின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது செல்போனை பறித்து சென்றது டி.வி. நகரை சேர்ந்த எழிலன் (வயது25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து செல்போனையும் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்