நகை கடைகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட வாலிபர் கைது

மாகியில் நகை கடைகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-08-07 23:33 IST

மாகி

மாகி பந்தக்கால் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மோட்டார் சைக்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் மாகி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது மோட்டார் சைக்கிளை திருடியது கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த முஜீப் (வயது 35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை மீட்டனர். அப்போது பூட்டுகளை உடைக்க பயன்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதும், இதனை வைத்து மாகி மற்றும் கேரளா பகுதிகளில் உள்ள நகை கடைகளை உடைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்