காலாப்பட்டு
காலாப்பட்டு ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 24). இவர் அங்குள்ள முந்திரி தோப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா (20). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின் கணவருடன் முந்திரி தோப்பில் கவுசல்யா வேலை செய்து வந்தார்.
இந்த நிலயைில் கடந்த சில மாதங்களாக கவுசல்யா ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும், நோய் குணமாகவில்லை. பொங்கல் தினமான நேற்று வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன், மனைவியை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி கிச்சைக்கு பின், மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா பரிதாபமாக இறந்துபோனார்.
இது குறித்த புகாரின்பேரில் காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்துள்ளார். திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் கவுசல்யாவின் சாவு குறித்து தாசில்தார் விசாரணை நடைபெற்று வருகிறது.