மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

புதுவையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 300 கிராம்கஞ்சா பறி முதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-14 17:35 GMT

புதுச்சேரி

புதுவையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 300 கிராம்கஞ்சா பறி முதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனை

புதுவை ஆட்டுப்பட்டி அந்தோணியார் கோவில் பஸ் நிறுத்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதைத் தொடர்ந்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இருப்பினும் போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

கையில் மாவுக்கட்டு...

விசாரணையில் அவர், ஆட்டுப்பட்டியை சேர்ந்த சுனில் என்ற கிஷோர்குமார் (வயது 22) என்பது தெரியவந்தது. அவர் பாலித்தீன் பாக்கெட்டுகளில் 300 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.

அவர் மாணவர்கள், வாலிபர்களுக்கு விற்பனை செய்ய கஞ்சாவை வைத்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட சுனில் வலது கையில் மாவுக்கட்டு போட்டுள்ளார். அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் கையில் காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்