புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு
புதுவையில் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், மேம்படுத்தவும் உலகத்தமிழ் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் 9.36 கோடி செலவில் பொது பயன்பாட்டு கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கப்படும். பாரதியார் நினைவு அருங்காட்சியகம்-ஆய்வு மையம், பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், பாரதியார் மணிமண்டபம், கீழூர் நினைவு சின்னம், தியாகி சுப்பையா-சரஸ்வதி சுப்பையா நினைவகம், சமூக அறிவியல் இலக்கிய ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம் ஆகிய இடங்களில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், மேம்படுத்தவும் புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்ச்சிறகம் மீண்டும் செயல்படுத்தப்படும். பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்படும். எம்.பில், பி.எச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு ஆய்வு உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.