பாண்டி மெரினா பீச்சில் உலக சாதனை நிகழ்ச்சி
புதுவை பாண்டி மெரினா பீச்சில் உலக சாதனைக்காக 40 பேர் தொடர்ந்து 40 நிமிடம் டிரம்ஸ் வாசித்தனர்.;
புதுச்சேரி
புதுவை பாண்டி மெரினா பீச்சில் உலக சாதனைக்காக 40 பேர் தொடர்ந்து 40 நிமிடம் டிரம்ஸ் வாசித்தனர்.
டிரம்ஸ் வாசிப்பு
உலக சாதனைக்காக யுவர் பேக்கர்ஸ் நிறுவனம், ஸ்டூடியோ 9 மற்றும் புதுச்சேரி டிரம்மர்ஸ் இணைந்து பாண்டி மெரினா பீச்சில் இசை பயிற்சி பெற்று வரும் 40 மாணவர்கள் தொடர்ந்து 40 நிமிடங்கள் உலக சாதனைக்காக டிரம்ஸ் வாசிக்கும் நிகழ்ச்சி இன்று இரவு நடந்தது.
ஒரேநேரத்தில் சீரான இடைவெளியில் அமர்ந்து அவர்கள் டிரம்ஸ் வாசித்தனர். இந்தநிகழ்ச்சியை கடற்கரைக்கு வந்து இருந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
முன்னதாக மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
இதை யுவர்ஸ் பேக்கர்ஸ் நிறுவன தலைவர் கிருஷ்ணராஜூ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
'தினத்தந்தி' கோடை விழா
அப்போது அவர் பேசியதாவது:-
இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். எனவே புதுவை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் டிரம்ஸ் வாசிக்கும் உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தோம்.
திறமை மிக்கவர்களை ஊக்கப்படுத்த 'தினத்தந்தி' நாளிதழுடன் இணைந்து கோடை விழாவை நடத்தி வருகிறோம். இதில் கடந்த 3 ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கல்லூரி மாணவிகளுக்கு தனித்திறன் போட்டி, பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தினோம். 4-வது வாரமாக வினாடி- வினா போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத புதுவையாக மாற்ற பணி செய்து வருகிறோம். எங்கள் சேவை தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் யுவர் பேக்கர்ஸ் இணை நிறுவனர் லட்சுமிநாராயணன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.