மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

புதுவை லாஸ்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து துப்புரவு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-04-30 17:04 GMT

புதுச்சேரி

லாஸ்பேட்டை நந்தகோபால் வீதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது 57). துப்புரவு தொழிலாளி. அவர் நேற்று மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அவர், டேபிள் பேன் சுவிட்சை தொட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விநாயகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்