மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

புதுவையில் தங்கும் விடுதியில் வேலை செய்யும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-09-29 18:01 GMT

புதுச்சேரி

விழுப்புரம் மாவட்டம் களத்துமேட்டு கீழ்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 36). அவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்வம் புதுவையில் ஒரு தனியார் தங்கும் விடுதியில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இன்று காலை தங்கும் விடுதியில் வேலை செய்யும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பெரியகடை போலீசார் பணியின் போது உரிய பாதுகாப்பு அளிக்காத தங்கும் விடுதி உரிமையாளரான ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்