மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
புதுவை முள்ளோடை பகுதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.;
பாகூர்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த வழுதலப்பட்டு, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 39). கூலித்தொழிலாளி. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு புதுவை பகுதியான முள்ளோடை பகுதியில் மயங்கி கிடந்தார். பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கிருமாம்பாக்கம் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.