20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது

புதுச்சேரியில் 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

Update: 2023-07-17 18:07 GMT

 புதுச்சேரி

கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துத்திப்பட்டு கேப்- சீகம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் ஏஞ்சல்ஸ், பிரின்சஸ், டைமண்ட்ஸ், குயின்ஸ் ஆகிய 4 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. இப்போட்டி வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது.

போட்டியை கேப் நிறுவன தலைவர் தாமோதரன், பத்மா தாமோதரன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். முதலாவது போட்டியில் ஏஞ்சல்ஸ்-குயின்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய குயின்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டு இழப்புக்கு 111 ரன் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய ஏஞ்சல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குயின்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஆட்டநாயகி விருது குயின்ஸ் அணி நந்தினிக்கு வழங்கப்பட்டது.

2-வது போட்டியில் பிரின்சஸ்- டைமண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பிரின்சஸ் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 136 ரன் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டைமண்ட்ஸ் அணி, பிரின்சஸ் அணியின் அபார பந்துவீச்சில் 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் பிரின்சஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆட்டநாயகி விருது பிரின்சஸ் அணி கவிஷாவுக்கு வழங்கப்பட்டது.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு ஏஞ்சல்ஸ்- டைமண்ட்ஸ் அணிகளும், நண்பகல் 1.30 மணிக்கு குயின்ஸ்- பிரின்சஸ் அணிகளும் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்