சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-07-04 17:33 GMT

புதுச்சேரி

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

12 மீனவர்கள்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கீழகாசாக்குடிமேட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன். அவருக்கு சொந்தமான படகில் கடந்த 3-ந் தேதி 12 மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

அந்த படகில், கீழகாசாக்குடியை சேர்ந்த இளையராஜா (வயது 33), கணேசன் (48), பிரேம்குமார் (25), ராமன் (31), தர்மசாமி (48), தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வீரா (28), தினேஷ் (28), ராமநாதன் (37), ஜெகதீஷ்வரன் (27), விக்னேஷ் (22), சதீஷ்குமார் (23), பாக்கியராஜ் (23) ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர்.

மீட்க வேண்டும்

இந்த நிலையில் வைத்தியநாதன் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் காரைக்கால் மீனவரின் படகையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களுடைய மீன்பிடி படகினையும் விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் மூலமாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்