பெண் கழுத்தை நெரித்து கொலை

காரைக்கால் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-15 17:31 GMT

காரைக்கால்

காரைக்கால் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்து வேறுபாடு

காரைக்கால் அக்கரைவட்டத்தை சேர்ந்தவர் கந்தகுமார். அவரது மனைவி வசந்தி (வயது 42). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கந்தகுமார், வசந்தி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து விட்டனர்.

இதனால் கந்தகுமார் முதல் 2 மகள்களுடன் அக்கரை வட்டத்திலும், வசந்தி கடைசி மகளுடன், நித்தீஸ்வரத்திலும் வசித்து வருகின்றனர். வசந்தி வீட்டு வேலைகள் செய்து வந்தார்.

கள்ளக்காதல்

இந்தநிலையில் வசந்திக்கும், அக்கரை வட்டத்தை சே்ாந்த உறவினர் சுந்தர மூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் சுந்தரமூர்த்தி அடிக்கடி வசந்தியின் வீட்டுக்கு சென்று வந்தார். மேலும் சிலர், வசந்தியுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சுந்தரமூர்த்தி, வசந்தியை கண்டித்தார்.

இன்று பகல் வழக்கம்போல் வசந்தி, காரைக்கால் நகர் பகுதியான கோல்டன்நகர் நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு வேலைக்கு சென்றார். வீட்டில் உரிமையாளர்கள் யாரும் இல்லை என்று தெரிகிறது. அப்போது அங்கு வந்த சுந்தரமூர்த்தி, வசந்தியிடம் தகராறு செய்தார். பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்று விட்டார்.

கழுத்தை நெரித்து கொலை

ஆனால் வசந்தி வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வசந்தி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர்கள் உடனடியாக காரைக்கால் நகர போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வசந்தியை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வசந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடைசியாக வசந்தி வேலை பார்த்த வீட்டுக்கு சுந்தரமூர்த்தி சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலையை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்