2 மகன்களுடன் பெண் மாயம்

மூலக்குளம் அருகே தங்க நகைகளை எடுத்து கொண்டு 2 மகன்களுடன் பெண் மாயமானார்.

Update: 2023-10-22 16:49 GMT

மூலக்குளம்

மேட்டுப்பாளையம் அடுத்த சண்முகபுரம் அண்ணா வீதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (வயது 41). அமுதசுரபி மதுபான பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி புனிதா (35). இவர்களுக்கு நரேந்திரன் (9), ராகவேந்திரன் (6 மாதம்) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று சிவப்பிரகாஷ் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது தங்க நகைகள் எடுத்து 2 மகன்களுடன் புனிதா மாயமாகி இருப்பது தெரியவந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்